/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
மெய்வழிச்சாலையில் சமத்துவ பொங்கல் விழா
/
மெய்வழிச்சாலையில் சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 15, 2025 08:55 AM

புதுக்கோட்டை; அன்னவாசல் அருகே மெய்வழிச்சாலையில் 69ஜாதியை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி சமத்துவ பொங்கலை சிறப்பாக கொண்டாடினர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மெய்வழிச்சாலை கிராமத்தில் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என மதத்தை பிரிக்காமல், அனைத்து ஜாதியினரும் ஜாதி மத பேதமின்றி வசிக்கின்றனர். இங்குள்ள சத்யதேவ பிரம்ம குலத்தினர் ஆலயத்திலுள்ள பொன்னரங்க தேவாலயத்தில் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை அனைவரும் ஒன்றுகூடி சமத்துவ பொங்கலாக கொண்டாடுகின்றனர்.
மெய்வழிசாலை பொன்னுரங்கன் தேவாலயத்தில் நேற்று சாலை ஆண்டவர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின், தமிழர்களின் பாரம்பரிய உடையான பஞ்ச கச்சம், தலைபாகை அணிந்த மக்கள் அங்கிருந்து புனித நீரை பெற்று தங்களது பொங்கல் பானையில் ஊற்றினர்.
தொடர்ந்து,மெய்வழிசாலை பொன்னுரங்கன் தேவாலயத்திலிருந்து சாலை வர்க்கவான் தீ பந்தத்தை ஊர்வலமாக எடுத்து வந்து அங்குள்ள கொடிமரத்தை 3 முறை சுற்றி வந்த பிறகு தீப்பந்தத்தை மேலே காட்டினர்.
அங்கிருந்த அனைவரும் தங்களது பொங்கல் பானை அடுப்பை மூட்டி, பொங்கலோ பொங்கல் என்று கூறி, பொங்கல் வைத்து, விழாவை சிறப்பாக கொண்டாடினர்.