/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
புதுக்கோட்டை அருகே விசிறி பாறை கல் கண்டுபிடிப்பு
/
புதுக்கோட்டை அருகே விசிறி பாறை கல் கண்டுபிடிப்பு
ADDED : நவ 28, 2024 02:46 AM

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் அருகே வெள்ளவெட்டான் பகுதியில் வீரன்காளி பொட்டல் எனும் இடத்தில், 5 ஏக்கரில் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களை கொண்ட இடம் உள்ளது. நெடிய குத்துக்கற்கள், கற்குவியல்கள், ஈமத்தாழிகள் இந்த இடத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இவை, அப்பகுதியில் உள்ள குளத்தில், துார் வாரிய போது வெளிப்பட்டவை.
அந்த வகையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விசிறி பாறை கல், சற்று சாய்ந்த நிலையில் உள்ளது. இது, ஈமச்சடங்கின் போது, வைக்கப்பட்ட அடையாள கல்லாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த கற்கள் தான், சிற்பங்களின் தொடக்கம் என்று கூட சிலர் கருதுகின்றனர்.
இந்த கல்லை கண்டுபிடித்த புதுக்கோட்டை தொல்லியல் மற்றும் வரலாற்று நடுவம் அமைப்பினர், அந்த பகுதியை சீரமைத்து, விசிறி பாறை கல்லை பாதுகாப்பாக நட்டு வைத்தனர்.