/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
முன்விரோதம் காரணமாக விவசாயி அடித்து கொலை
/
முன்விரோதம் காரணமாக விவசாயி அடித்து கொலை
ADDED : செப் 10, 2025 03:34 AM
புதுக்கோட்டை:முன்விரோதம் காரணமாக, விவசாயியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
புது க்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள துலுக்கம்பட்டியை சேர்ந்த விவசாயி பாலுச்சாமி, 58. நேற்று அதிகாலை, விராலிமலைக்கு பைக்கில் சென்றவர், கீரனுார் - விராலிமலை சாலையில், முல்லையூர் அருகே இறந்து கிடப்பதா க விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்து வந்த பாலுச்சாமி உறவினர்கள், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறினர். போலீசார், துலுக்கம்பட்டியை சேர்ந்த முனியாண்டி, 30, என்பவரிடம் விசாரித்தபோது, முன்விரோதம் காரணமாக, பாலுச்சாமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
நேற்று அதிகாலை, பைக்கில் விராலிமலை வந்து வீடு திரும்பிய பாலுசாமியை, டாடா ஏஸ் வாகனம் மூலம் இடித்து தள்ளி, நான்கு பேர் கம்பியால் அடித்து கொலை செய்ததாக முனியாண்டி கூறினார். இதையடுத்து, முனியாண்டி, மணிகண்டன், எட்வின், மாரிமுத்து ஆகிய நால்வரை விராலிமலை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரை தேடி வருகின்றனர்.