/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
வேங்கைவயலில் 2வது நாளாக தொடர்கிறது உண்ணாவிரதம்
/
வேங்கைவயலில் 2வது நாளாக தொடர்கிறது உண்ணாவிரதம்
ADDED : ஜன 27, 2025 04:01 AM
புதுக்கோட்டை: வேங்கைவயல் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக கூறுவதாக கண்டனம் தெரிவித்து, ஊர் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி, இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில், நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையில், அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றம் சுமத்துவதாக கூறி, வேங்கைவயல் கிராமத்தினர் நேற்று முன்தினம் முதல் ஊரில் அமர்ந்து, காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். இதையடுத்து, வெளிநபர்கள் கிராமத்துக்குள் வருவதை தடுக்கும் வகையில் வேங்கைவயல், இறையூர் கிராமங்களுக்கு வரும் ஏழு வழிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஊருக்குள் செல்லும் நபர்கள் விசாரிக்கப்பட்டு, உள்ளூர் நபர்கள் மட்டுமே தங்கள் அடையாள அட்டை காண்பித்து, போலீசார் அனுமதி பெற்று செல்கின்றனர். பத்திரிகையாளர்கள் செல்லவும் அனுமதி இல்லை. இப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேங்கைவயலில் இரண்டாவது நாளாக குடியரசு தினமான நேற்று கருப்புக்கொடி ஏந்தி, 30க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

