/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
திருமணம் செய்து வைக்க கேட்ட மகனை கொன்ற தந்தை கைது
/
திருமணம் செய்து வைக்க கேட்ட மகனை கொன்ற தந்தை கைது
ADDED : ஜூலை 17, 2025 03:00 AM
ஆலங்குடி:திருமணம் செய்து வைக்க, 'டார்ச்சர்' செய்த மகனை கட்டையால் அடித்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், வன்னியன்விடுதியைச் சேர்ந்தவர் சுப்புக்கண்ணு, 61. இவரது மகன் ராமதாஸ், 34. இவர்கள் வன்னியன்விடுதியில் மரப்பட்டறை நடத்தி வருகின்றனர். ராமதாசுக்கு,ஜாதகம் பொருந்தாமல் திருமணம் தள்ளிப் போனது.
இது தொடர்பாக, மகன் - தந்தை இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12.30 மணிக்கு, மரப்பட்டறையில் இருந்த தந்தை சுப்புக்கண்ணுவிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அங்கிருந்த ஆஸ்பெட்டாஸ் ஷெட்டை ராமதாஸ் அடித்து நொறுக்கி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுப்புக்கண்ணு, அங்கிருந்த கட்டையால் மகனை தலையில் தாக்கியதில், அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரில் ஆலங்குடி போலீசார், சுப்புக்கண்ணுவை கைது செய்தனர்.