/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
சொத்து கேட்ட மகனை அடித்துக்கொன்ற தந்தை
/
சொத்து கேட்ட மகனை அடித்துக்கொன்ற தந்தை
ADDED : செப் 28, 2024 02:20 AM
அறந்தாங்கி:புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ், 57. இவரது மகன் இன்பரசன், 27; இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு, இரண்டு மாதத்திற்கு முன் ஊர் திரும்பியுள்ளார். இவர் வெளிநாடு செல்ல, பணம் உள்ளிட்ட உதவிகளை செல்வராஜ் செய்துள்ளார். ஆனால், இன்பரசன் வெளிநாடு சென்று வந்து, தந்தைக்கு எந்த உதவியும் செய்யவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையில், சொத்தை உடனடியாக பிரித்து தரச் சொல்லி, நேற்றுமுன் தினம் இரவு, தந்தையுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ், தன் நண்பர் உலகநாதன், 50, உதவியுடன் இன்பரசனை கட்டையால் தாக்கினார்.
படுகாயமடைந்த இன்பரசன், சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த அறந்தாங்கி போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.