/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
இணங்க மறுத்த யாசகியை கொன்ற சக யாசகர் கைது
/
இணங்க மறுத்த யாசகியை கொன்ற சக யாசகர் கைது
ADDED : டிச 22, 2025 09:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை: ஆசைக்கு இணங்க மறுத்த யாசகியை கொலை செய்த யாசகரை, போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், ஆமூரை சேர்ந்தவர் நுார்ஷகான், 58; ஊர் ஊராக சென்று பிச்சை எடுப்பவர். இவருடன் பிச்சை எடுப்பவர்கள் சிலர், டிச., 2ல் பொன்னமராவதி வடகரை சித்தி விநாயகர் கோவில் பின்புறம் இரவு துாங்கியுள்ளனர்.
அப்போது, சென்னை, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த யாசகர் சதீஷ்குமார், 61, என்பவர், நுார்ஷகானை ஆசைக்கு இணங்க அழைத்துள்ளார். மறுத்ததால், அவரை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
பொன்னமராவதி போலீசார், சதீஷ்குமாரை நேற்று கைது செய்தனர்.

