/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
புதுகை அரசு மருத்துவமனையில் தீ விபத்து: பொருட்கள் நாசம்
/
புதுகை அரசு மருத்துவமனையில் தீ விபத்து: பொருட்கள் நாசம்
புதுகை அரசு மருத்துவமனையில் தீ விபத்து: பொருட்கள் நாசம்
புதுகை அரசு மருத்துவமனையில் தீ விபத்து: பொருட்கள் நாசம்
ADDED : ஆக 12, 2025 03:52 AM

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை அரசு மருத்துவமனை தரைத்தளத்தில், 20 படுக்கைகளை கொண்ட ஹெச்.டி.யூ., என்ற உயர் சார்பு வார்டில், இரண்டு நாட்களாக நோயாளிகள் யாரும் இல்லை. இதில், வென்டிலேட்டர் ஆப் செய்யாமல் தொடர்ச்சியாக செயல்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை, 4.30 மணியளவில் அதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, வார்டு முழுதும் புகை மண்டலமாக மாறியது. புதுக்கோட்டை தீயணைப்பு துறையினர், தீயை கட்டுப்படுத்தினர்.
தீ விபத்தில் ஒரு படுக்கை, மானிட்டர், வென்டிலேட்டர், 'ஏசி' சேதமடைந்து, வார்டு முழுதும் சாம்பலானது. அந்த பகுதியில் இருந்த நோயாளிகள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட வார்டுக்கு அருகாமையில், தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்ட நிலையில், தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.