/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
பொங்கல் பண்டிகை எதிரொலி ரூ.5 கோடிக்கு ஆடு விற்பனை
/
பொங்கல் பண்டிகை எதிரொலி ரூ.5 கோடிக்கு ஆடு விற்பனை
ADDED : ஜன 11, 2025 10:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை:புதுக்கோட்டை, சந்தைப்பேட்டையில், நுாறாண்டு பழமையான ஆட்டு சந்தையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சந்தையில், ஆடுகள் வாங்க, விற்க நேற்று ஏராளமானோர் குவிந்தனர். சந்தையில், 3,000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. ஒரு ஆடு, 10,000 முதல் 25,000 ரூபாய் வரை விற்பனையானது. இதனால், 3.5 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடந்தது.
கடலுார் மாவட்டம், வடலுாரில் சனிக்கிழமை வாரச்சந்தையில், 1,000க்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று ஒரே நாளில், 1.5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.