/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
தங்க குண்டுமணி, பானை கொடும்பாளூரில் கண்டெடுப்பு
/
தங்க குண்டுமணி, பானை கொடும்பாளூரில் கண்டெடுப்பு
ADDED : ஏப் 20, 2025 03:19 AM

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே கொடும்பாளூரில் குடியிருப்புகள் அமைந்துள்ள அக்ரஹாரம் மேட்டுப்பகுதி காலி இடங்களில் மத்திய தொல்லியல் துறையின் திருச்சி வட்டப்பிரிவு சார்பில், அகழாய்வு பணி ஜன., 12ம் தேதி துவங்கப்பட்டது.
தொடர்ந்து, நடைபெற்ற அகழாய்வில் புதைந்த வீடுகளுக்கு அடையாளமாக, நான்கு அடியில் செங்கற்களால் எழுப்பப்பட்ட மேல்சுவர், அதன் அடியில் மண் சுவரும், அக்காலத்தில் நெசவுத் தொழிலுக்கு பயன்படுத்திய தக்களி, கொண்டை வடிவில் ஊசி, வட்டக்கல், உள்ளிட்டவை ஏற்கனவே கிடைத்தன.
நேற்று, பண்டைய கால தங்கத்தில் செய்யப்பட்ட ஒரு கிராம் எடை குண்டுமணி, அழகிய வடிவிலான மூடிய நிலையில் ஒரு மண்பானை, வட்டக்கல் ஆகியவை கிடைத்துள்ளன.

