/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
தலைமை பலவீனமானால் கட்சி தானாக அழிந்துவிடும்: ரகுபதி
/
தலைமை பலவீனமானால் கட்சி தானாக அழிந்துவிடும்: ரகுபதி
தலைமை பலவீனமானால் கட்சி தானாக அழிந்துவிடும்: ரகுபதி
தலைமை பலவீனமானால் கட்சி தானாக அழிந்துவிடும்: ரகுபதி
ADDED : அக் 22, 2024 03:34 AM
புதுக்கோட்டை : புதுக்கோட்டை, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில், அறநிலையத்துறை சார்பில், நான்கு ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நடத்தி வைத்தார்.
அவர் கூறியதாவது:
அ.தி.மு.க.,வுடன் யாரும் கூட்டணி சேர தயாராக இல்லை. எந்தவொரு இயக்கத்தையும் அழிக்க வேண்டிய அவசியம் தி.மு.க.,வுக்கு கிடையாது.
ஒரு கட்சியின் தலைமை பலவீனமாக உள்ளபோது, அந்த இயக்கம் தானாகவே அழிந்து விடும். அ.தி.மு.க.,வில் பழனிசாமி தலைமை தற்போது பலவீனமாக உள்ளது. அதனால், அந்த கட்சியின் எதிர்காலம் தான் கேள்விக்குறியாக இருக்கிறது.
ஆனால், தி.மு.க.,வை குறித்து ஆரூடம் சொல்லிக் கொண்டிருக்கும் பழனிசாமி, தி.மு.க., கூட்டணி உடைந்து விடும் என்று பகல் கனவு காணுகிறார்.
அது பலிக்காது. அவர் மட்டுமல்ல, எந்தக் கொம்பன் நினைத்தாலும், தி.மு.க., கூட்டணியை உடைக்க முடியாது; நசுக்கவும் முடியாது. தி.மு.க., கூட்டணி எந்த சூழ்நிலையிலும் உடையாது.
தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக மக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தமிழகம், திராவிடம் இவை இரண்டையும் பிரிக்க முடியாது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளில் திராவிடம் என்ற பெயர் உள்ளது.
தமிழகத்தில் உள்ள கட்சிகள் திராவிடம் சார்ந்த கட்சிகள் தான். புதிய கட்சி துவங்குபவர்களும் 'திராவிட' பெயர் கொண்டு தான் துவங்குகின்றனர். திராவிடம் என்பது தமிழ் மண்ணில் ஊறிப்போன ஒன்று.
தி.மு.க.,வை முன்னிறுத்தி சீமான் கற்பனையில் எதை வேண்டுமானாலும் கூறலாம். திருமாவளவனுக்கான முதல்வர் பதவி குறித்து, மத்திய இணையமைச்சர் முருகனுக்கும், சீமானுக்கும் நடக்கும் பட்டிமன்றத்தில் தி.மு.க., தலையிட விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

