/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
தடையை மீறி பாலித்தீன் பயன்பாடு அதிகரிப்பு
/
தடையை மீறி பாலித்தீன் பயன்பாடு அதிகரிப்பு
ADDED : பிப் 15, 2024 09:15 PM
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் கடைகள், ஹோட்டல்களில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பயன்பாடு மீண்டும் தலைதுாக்கி உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
பிளாஸ்டிக் தடை அமல் குறித்து தமிழக முதல்வரின் அறிவிப்பு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் பருவநிலை மாற்றங்கள் மற்றும் விளைநிலங்கள் பாதிப்பு ஆகியவற்றால் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து தமிழக அரசு கடந்த ஆண்டு ஜனவரி முதல் மாநிலம் முழுதும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழல் துறை, உணவு பாதுகாப்புத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள் சார்பில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் தடையை அமலுக்கு கொண்டு வந்தனர்.
இதற்கு வணிகர்கள், மாவட்ட வர்த்தக கழகம் உள்ளிட்ட பல்வேறு வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்கினர்.
பின்னர், மாவட்டம் முழுதும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது பாத்திரங்கள் அல்லது துணி பைகளுடன் செல்வது உறுதியானது.
இதன் மூலம் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு வெகுவாக குறைந்தது. ஆனால், சில மாதங்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பகிரங்கமாக தள்ளுவண்டி முதல் சில கடைகள் வரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை மீண்டும் வழங்க தொடங்கினர்.
இதனால், மாவட்டத்தில் மெல்ல மெல்ல தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தலைதுாக்க துவங்கியது.
தொடர்ந்து, பிளாஸ்டிக் தடை அமல் குறித்து, தமிழக முதல்வரின் அறிவிப்பு, அமல்படுத்த முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.
மேலும், சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் தமிழக முதல்வரின் அறிவிப்பு காற்றில் பறந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.