/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
தொட்டியில் குழந்தை சடலம் கொலையா என விசாரணை
/
தொட்டியில் குழந்தை சடலம் கொலையா என விசாரணை
ADDED : ஜன 13, 2024 08:21 PM
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே, கரையப்பட்டியைச் சேர்ந்தவர் மோகன், 34. இவரது மனைவி கிருத்திகா, 26. அவர்களுக்கு காதல் திருமணம் நடந்து மூன்று ஆண்டுகளாகிறது. கடந்த டிசம்பரில் கிருத்திகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
தம்பதி, குழந்தையுடன் கரையப்பட்டியில் உள்ள வீட்டில் வசித்தனர். நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில், மோகன் துாங்கிய போது, அருகே துாங்கிக் கொண்டிருந்த குழந்தையை திடீரென காணவில்லை.
இரவு மாடியில் இருந்த சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியில் குழந்தை இறந்த நிலையில் கிடந்து உள்ளது. கே.புதுப்பட்டி போலீசில் மோகன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, குழந்தையின் சடலத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில், முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்த மோகன், கிருத்திகாவை இரண்டாவது திருமணம் செய்திருப்பது தெரிய வந்தது.
பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை, மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. கே.புதுப்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

