ADDED : ஏப் 08, 2026 09:42 PM
புதுக்கோட்டை: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தின் போது ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக, திருக்கோவில்கள் இளநிலை பொறியாளரை 'சஸ்பெண்ட்' செய்து, உதவி ஆணையர் நேற்று உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் கடந்த 6ம் தேதி தேர் திருவிழாவின் போது தேரின் வடமான இரும்பு சங்கிலி பழுதடைந்துள்ளதை சரி செய்ய முற்பட்டபோது, கொல்லு பணி செய்யும் மணிவண்ணன், 45, என் பவர் உயிரிழந்தார்.
தொடர்ந்து, அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தேர் உறுதி தன்மை தேரோடும் வீதி தேர்வடம் ஆகியவற்றை ஆய்வு செய்து செயல் அலுவலர், உதவி ஆணையருக்கு தெரிவிக்கவில்லை என்பது தெரிந்தது.
இதையடுத்து, குளத்துார் பொதுப்பணித்துறை இளநிலை உதவி பொறியாளர் என்பவரை, அறநிலையத்துறை உதவி ஆணையர் ரஞ்சிதா நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
