/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
கோட்டாட்சியர் கார் மோதியது: பைக்கில் சென்ற இருவர் உயிரிழப்பு; புதுக்கோட்டையில் துயரம்

UPDATED : செப் 20, 2024 11:54 AM
ADDED : செப் 20, 2024 11:50 AM

புதுக்கோட்டை: நமணசமுத்திரம் அருகே புதுக்கோட்டை ஆர்.டி.ஓ., கார் மோதி இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை ஆர்.டி.ஓ.,(வருவாய் கோட்டாட்சியர்) ஐஸ்வர்யா. இவர் பணி நிமித்தம் திருமயம் சென்று கொண்டிருந்தார். காரைக்குடி - திருச்சி நெடுஞ்சாலையில் நமணசமுத்திரம் என்ற இடத்தில், கோட்டாட்சியர் சென்ற கார், டூவிலர் மீது மோதியது. இச்சம்பவத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஐஸ்வர்யாவுக்கு காயம் ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இறந்தவர்களின் விவரம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. சம்பவம் குறித்து நமனசமுத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.டி.ஓ., கார் மோதி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.