/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
கடன் பெற்று தருவதாக 63 பேரிடம் ரூ.75 லட்சம் மோசடி செய்தவர் கைது
/
கடன் பெற்று தருவதாக 63 பேரிடம் ரூ.75 லட்சம் மோசடி செய்தவர் கைது
கடன் பெற்று தருவதாக 63 பேரிடம் ரூ.75 லட்சம் மோசடி செய்தவர் கைது
கடன் பெற்று தருவதாக 63 பேரிடம் ரூ.75 லட்சம் மோசடி செய்தவர் கைது
ADDED : டிச 08, 2024 11:44 PM
புதுக்கோட்டை : புதுக்கோட்டையில், இண்டஸ்இண்ட் தனியார் வங்கியில், வாடிக்கையாளர்களுக்கு கடன் பெற்று தரும் ஏஜன்டாக பணியாற்றி வருபவர் மணிகண்டன், 44. இவர், புதுக்கோட்டை மாவட்டத்தில், 63 வாடிக்கையாளர்களுக்கு கடன் பெற்று தருவதாக கூறி, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பெற்று அவற்றை வங்கியில் அளித்துள்ளார்.
வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் கடன் ஒப்புதல் ஆகிவிட்டால், அவர்களே அந்த வங்கியில் கரன்ட் அக்கவுன்ட் துவக்கி, அதில், கடன் தொகையை வரவு வைத்து விடுவது வழக்கம்.
ஆனால், மணிகண்டன் பெற்ற 63 வாடிக்கையாளர்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை, வங்கியில் சமர்ப்பித்து, போலியாக மொபைல் எண்ணை அளித்து, வங்கியில் பெற்ற கடன் தொகையை அந்தந்த கணக்கில் வரவு வைத்தார்.
பின், ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும், 30,000 ரூபாயை வழங்கி விட்டு, 1.60 லட்சம் ரூபாயை முறைகேடு செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுபோல, 63 பேரிடம், 75 லட்சம் ரூபாயை அவர் சுருட்டினார். இவரின் மோசடியை அறிந்த சிலர், போலீசில் புகார் அளித்து, மணிகண்டனை நேற்று பிடித்து புதுக்கோட்டை டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரிக்கின்றனர். இவருக்கு உடந்தையாக அதே தனியார் வங்கியில் பணியாற்றும் மூன்று நபர்கள் இருப்பது தெரிந்ததை அடுத்து, அவர்களிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், கடன் பெறுவதற்காக தங்களின் ஆதார் அட்டைகள் உள்ளிட்ட சில ஆவணங்களை, வங்கி ஏஜன்டிடம் சமர்ப்பித்து, ஏமாந்த நபர்கள் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்க நேற்று வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.