/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
மகளை கொலை செய்து தாய் துாக்கிட்டு தற்கொலை
/
மகளை கொலை செய்து தாய் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஜூன் 01, 2025 11:22 PM
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், பூவரசங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார், 28; சிங்கப்பூரில் பணிபுரிகிறார். இவரது மனைவி ஸ்ரீகா, 24. மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டரை வயதில் பெண் குழந்தை இருந்தது.
ஸ்ரீகா மூன்று மாதங்களாக, ஆன்லைன் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழந்துள்ளார். இதை சரத்குமார் கண்டித்துள்ளார். ஆனாலும், ஸ்ரீகா மீண்டும் ஆன்லைன் கிரிக்கெட் விளையாட்டில், 70,000 ரூபாய் இழந்துள்ளார். இதை சரத்குமார் மீண்டும் கண்டித்தார்.
இதில், மனமுடைந்த ஸ்ரீகா, குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் இருவர் சடலத்தையும் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.