/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
பைக் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி
/
பைக் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி
ADDED : அக் 30, 2025 03:18 AM
புதுக்கோட்டை:  பைக்கில் சென்றவர்கள் மீது லாரி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம், பனங்குடியை சேர்ந்தவர் விவசாயி, மகாதேவன், 45,இதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் கணேசன், 46 ஆகிய இருவரும் கரூரில், கதிர் அடிக்கும் இயந்திரம் வாங்குவதற்காக, நேற்று 2 லட்சம் ரூபாய் பணத்துடன் பைக்கில் சென்றனர்.
புதுக்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி திருச்சி--ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் இருந்து, மதுரை சாலையில், திரும்பிய போது, பைக் மீது மோதியது. கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மகாதேவன் காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருமயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

