/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
பிரேக் பிடிக்காத அரசு பஸ் பைக் மீது ஏறியதால் பீதி
/
பிரேக் பிடிக்காத அரசு பஸ் பைக் மீது ஏறியதால் பீதி
ADDED : நவ 07, 2024 01:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் இருந்து திருச்சி நோக்கி நேற்று சென்ற அரசு பஸ், புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டு பின்புறம் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது, அந்த பஸ்சில் திடீரென பிரேக் பிடிக்காததால், புதுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் நீலமணிகண்டன் ஆகியோர் சென்ற பைக் மீது ஏறி இறங்கியது.
இதில், அதிர்ஷ்டவசமாக பைக்கில் சென்ற இருவரும் உயிர் தப்பினர். இதுகுறித்து, டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.