sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

'பார்' திறக்க எதிர்ப்பு மக்கள் சாலை மறியல்

/

'பார்' திறக்க எதிர்ப்பு மக்கள் சாலை மறியல்

'பார்' திறக்க எதிர்ப்பு மக்கள் சாலை மறியல்

'பார்' திறக்க எதிர்ப்பு மக்கள் சாலை மறியல்


ADDED : ஜூலை 17, 2025 03:01 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 03:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:புதுக்கோட்டையில், 'மனமகிழ்' என்ற பெயரில், எப்.எல்., 2 மதுக்கூடம் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட அசோக் நகரில், மனமகிழ் மன்றம் என்ற பெயரில், எப்.எல்., 2 மதுக்கூடம் திறக்க, தனியாருக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதை திறக்கக்கூடாது என, பலமுறை அப்பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், எப்.எல்., 2 மதுக்கூடம் திறப்பதற்கான ஏற்பாடு, தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில், ஆத்திரமடைந்த மக்கள், நேற்று புதுக்கோட்டை -- அறந்தாங்கி தேசிய நெடுஞ்சாலையில், அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கணேஷ்நகர் போலீசார், மக்களிடம் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்தனர். இதனால், புதுக்கோட்டை -- அறந்தாங்கி தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us