/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
வேங்கைவயல் வழக்கு விவகாரம் 14 பேரை கைது செய்தது போலீஸ்
/
வேங்கைவயல் வழக்கு விவகாரம் 14 பேரை கைது செய்தது போலீஸ்
வேங்கைவயல் வழக்கு விவகாரம் 14 பேரை கைது செய்தது போலீஸ்
வேங்கைவயல் வழக்கு விவகாரம் 14 பேரை கைது செய்தது போலீஸ்
ADDED : ஜன 31, 2025 02:15 AM
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில், அம்பேத்கர் சிலை முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் மற்றும் சி.பி.சி.ஐ.டி., அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஏழு பேர் என, தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தை சேர்ந்த 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், வேங்கைவயலைச் சேர்ந்த காவலர் முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் ஈடுபட்டதாக வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த 20-ம் தேதி, சி.பி.சி.ஐ.டி., போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இந்த குற்றப்பதிரிகையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, தமிழக மக்கள் புரட்சிக் கழத்தின் சார்பில் புதுக்கோட்டை நிஜாம் காலனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு திட்டமிருந்தனர்.
இப்போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. எனினும், அனுமதியின்றி போராட்டம் நடத்தப்போவதாக கிடைத்த தகவலையடுத்து, 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டத்துக்கு அண்ணாசிலை மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக புறப்பட ஆயத்தமாகிய, அந்த அமைப்பின் தலைவர் குணசேகரன் உட்பட ஏழு பேர் மற்றும் அம்பேத்கர் சிலை முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் என மொத்தம் 14 பேரை, டவுன் போலீசார் கைது செய்தனர்.

