/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த சிறாருக்கு பாராட்டு
/
சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த சிறாருக்கு பாராட்டு
சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த சிறாருக்கு பாராட்டு
சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த சிறாருக்கு பாராட்டு
ADDED : ஏப் 22, 2025 07:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே, வைரிவயல் கிராமத்தில் சாலை ஓரத்தில் கிடந்த பணத்தை, நேர்மையுடன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த சிறாருக்கு எஸ்.ஐ., இனிப்பு வழங்கிப் பாராட்டினர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராமத்தில், பள்ளி சிறார் நான்கு பேர், சாலையோரம் கிடந்த 5,000 ரூபாயை எடுத்து, அறந்தாங்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, எஸ்.ஐ., சரவணனிடம் ஒப்படைத்தனர்.
இதைப் பாராட்டிய எஸ்.ஐ., சரவணன், அவர்களை பேக்கரிக்கு அழைத்துச் சென்று, இனிப்பு வாங்கிக் கொடுத்து, பாராட்டினார்.