/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
டாஸ்மாக் கடை திறக்க கோரி டவரில் ஏறி போராட்டம்
/
டாஸ்மாக் கடை திறக்க கோரி டவரில் ஏறி போராட்டம்
ADDED : ஜன 15, 2025 11:52 PM

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் பகுதியில் அரசு டாஸ்மாக் கடையில், நேற்று முன்தினம் ஒரு மது பாட்டிலுக்கு, 5 முதல் 10 ரூபாய் வரை கூடுதலாக வசூல் செய்துள்ளனர். அங்கு வந்த 'குடி'மகன்கள் சிலர் விற்பனையாளர்களிடம் கேள்வி கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், பதற்றம் அடைந்த விற்பனையாளர்கள், டாஸ்மாக் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். பின், டாஸ்மாக் அதிகாரிகள் உத்தரவில், அந்த கடையை பூட்டியுள்ளனர்.
இதுகுறித்து, அறிந்த மீமிசல் போலீசார் விசாரணை செய்த போது, நிர்வாக காரணங்களுக்காக இந்த தொகை வசூலிக்கப்பட்டதாகவும், இதை டாஸ்மாக் துறையின் அதிகாரிகளின் ஒப்புதலோடு வசூல் செய்ததாகவும் கடையை பூட்டி விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
குடிமகன் ஒருவர் கடையை பூட்டக்கூடாது என்று கூறி, பூட்டிய கடையை உடனடியாக திறக்க வேண்டும் என்று டாஸ்மாக் கடைக்கு அருகே இருந்த மொபைல் போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் மீமிசல் போலீசார், மொபைல் போன் டவர் மீது ஏறிய குடிமகனை சமாதானம் செய்யும் விதமாக பேசி, பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரை பத்திரமாக மீட்டனர்.

