/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
புதுகையில் மனிதசங்கிலி தே.மு.தி.க., திடீர் முடிவு
/
புதுகையில் மனிதசங்கிலி தே.மு.தி.க., திடீர் முடிவு
ADDED : ஜூலை 19, 2011 12:41 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், நகராட்சி நிர்வாகத்தை கலைக்கக் கோரியும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபடுவதென தே.மு.தி.க., முடிவு செய்துள்ளது.புதுக்கோட்டையில் தே.மு.தி.க., மாவட்டக்குழு கூட்டம் நடந்தது.
மாவட்டச் செயலாளர் ஜாஹீர் தலைமை வகித்தார். பொருளாளர் கதிரவன், நகரச் செயலாளர் சிங்கமுத்து உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். புதுக்கோட்டையில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட நகர்ப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய மறுத்துவரும் நகராட்சி நிர்வாகம், வார்டுகளின் எண்ணிக்கையை குறைப்பது, வளர்ச்சிப் பணிகளுக்காக அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை அரசிடமே திருப்பி ஒப்படைப்பது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதை கண்டித்தும், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்ய மறுத்துவரும் நகராட்சி நிர்வாகத்தை கலைக்கக் கோரியும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபடுவதென கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.