/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
வீரகாளியம்மன் கோவில் ஆடித்திருவிழாஅறந்தையில் இன்று தேரோட்டம் துவக்கம்
/
வீரகாளியம்மன் கோவில் ஆடித்திருவிழாஅறந்தையில் இன்று தேரோட்டம் துவக்கம்
வீரகாளியம்மன் கோவில் ஆடித்திருவிழாஅறந்தையில் இன்று தேரோட்டம் துவக்கம்
வீரகாளியம்மன் கோவில் ஆடித்திருவிழாஅறந்தையில் இன்று தேரோட்டம் துவக்கம்
ADDED : ஆக 03, 2011 12:39 AM
புதுக்கோட்டை: அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் ஆடிப்பெருந் திருவிழாவை முன்னிட்டு இன்றும், நாளையும் தேர்த்திருவிழா நடக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரின் மையப்பகுதியில் உள்ளது அருள்மிகு
வீரமாகாளியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பெருந் திருவிழா நடப்பது
வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 26ம் தேதி அம்மனுக்கு காப்புகட்டும்
வைபவத்துடன் ஆரம்பமாகியது. ஆகஸ்ட் 14ம் தேதி முடிய விழா தொடர்ந்து 20
நாட்கள் நடக்கிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் திருக்கோவில் நிர்வாகத்தினர்,
மாகாணத்தார் மற்றும் மண்டகபடி தாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் மற்றும்
வழிபாடுகள் நடக்கிறதுவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்றும், நாளையும்
தேர்த்திருவிழா நடக்கிறது. இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு திருக்கோவில்
முன் திருக்கோவில் நிர்வாகத்தினர் முன்னிலையில் ஜமீன் பரம்பரையினர் மற்றும்
மாகாணத்தார்கள் தேரை வடம் தொட்டு இழுத்து வைக்க தேரோட்டம்
ஆரம்பமாகிறது.
கோவிலை ஒருமுறை வலம்வந்த பின்னர் நகரின் பல வீதிகளை கடந்து
இரவு 10 மணிக்கு பழைய ஆஸ்பத்திரி சாலையில் உள்ள காளியம்மன் கோவிலில் தேர்
நிலைநிறுத்தப்படுகிறது. அங்கிருந்து நாளை காலை ஏழு மணிக்கு புறப்படும்
திருத்தேர் மதியம் ஒருமணிக்கு கோவிலை வந்தடைகிறது.தேர்த்திருவிழாவின் போது
இரண்டு நாட்களும் சர்வ அலங்காரத்தில் வீரமாகாளியம்மன் திருத்தேரில்
வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில், மாவட்டத்தின் பல்வேறு
பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை
தரிசிக்கின்றனர்.பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும்
திருக்கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.