/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
மனநோயாளி போல பேசுகிறார் விஜயபாஸ்க ரை கலாய்த்த ரகுபதி
/
மனநோயாளி போல பேசுகிறார் விஜயபாஸ்க ரை கலாய்த்த ரகுபதி
மனநோயாளி போல பேசுகிறார் விஜயபாஸ்க ரை கலாய்த்த ரகுபதி
மனநோயாளி போல பேசுகிறார் விஜயபாஸ்க ரை கலாய்த்த ரகுபதி
ADDED : ஜன 05, 2024 10:48 PM
புதுக்கோட்டை:''முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மன நோயாளி போல பேசி வருகிறார்,'' என, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:
'அமைச்சரை பதவி நியமிக்கவோ, நீக்கவோ, முதல்வருக்கு தான் உரிமை உள்ளது' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது.
நிதி ஒதுக்கீடு
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த, எதிர்க்கட்சிஎம்.எல்.ஏ.,க்கள் மனு அளித்தபோது, அதை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டமிட்டே, அந்த பகுதிகளுக்கு அனுமதி மறுத்து வந்தார்.
ஆனால் தற்போது, 'அரசியல் இன்றி அனைத்து பகுதிகளுக்கும் சமமாக அனுமதி கொடுக்க வேண்டும்' என்று கூறுகிறார். தற்போதைய ஆட்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையாக பாரபட்சம் இன்றி நடத்தப்படுகிறது.
புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக்கல்லுாரி முறையாக செயல்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சியில் கொரோனாவை காரணம் காட்டி, நிதி ஒதுக்கீடு செய்யாத சூழலிலும் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசு பல் மருத்துவக்கல்லுாரி திறக்கப்பட்டு, செயல்பட்டு வரும் நிலையில், அந்த கல்லுாரி செயல்படவில்லை என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மன நோயாளி போல பேசி வருகிறார். அவர்கள் செயல்பாடுகள் அப்படித்தான் காட்டுகிறது. அவரது மனைவியும், குடும்பத்தினரும் அவருக்கு தேவையான சிகிச்சையை அளிக்க வேண்டும்.
கூச்சல்
திருச்சியில் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சி, மத்திய அரசு விழா என்பதால், பா.ஜ.,விற்கு மட்டும் அழைப்பு அனுப்பினர். தி.மு.க.,வினர் அந்த நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை. இதனால், பா.ஜ.,வினர் அந்த விழாவில் முதல்வர் பேசும்போது, கூச்சலிட்டனர்.
அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தான், பா.ஜ.,வின் மொத்த உறுப்பினர்கள். தமிழகத்தில், 7,000 முதல், 8,000 பா.ஜ., உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.