/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் தீயால் பாதிப்பு
/
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் தீயால் பாதிப்பு
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் தீயால் பாதிப்பு
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் தீயால் பாதிப்பு
ADDED : அக் 05, 2024 12:49 AM

புதுக்கோட்டை:சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற விரைவு ரயில், திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு செல்லும் பாதையில், நார்த்தாமலை அருகே நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, ரயில் இன்ஜின் மேற்பகுதியில், புகை போக்கியில் உள்ள டியூப் வெடித்ததால், புகைப்போக்கி தீப்பற்றி எரிய துவங்கியது.
இதையறிந்த ரயில் இன்ஜின் டிரைவர், ரயிலை உடனடியாக நிறுத்தினார். பின், தீயை அணைத்தார். அந்த இன்ஜினை தொடர்ந்து இயக்காமல், மாற்று ரயில் இன்ஜின் வரவழைக்கப்பட்டு, உடனடியாக ரயில் புறப்பட்டு ராமேஸ்வரம் நோக்கி சென்றது. இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணியர் காத்திருந்தனர்.