/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
மனநல மாத்திரை கொடுக்க மறந்த தந்தையை கொன்ற மகன் கைது
/
மனநல மாத்திரை கொடுக்க மறந்த தந்தையை கொன்ற மகன் கைது
மனநல மாத்திரை கொடுக்க மறந்த தந்தையை கொன்ற மகன் கைது
மனநல மாத்திரை கொடுக்க மறந்த தந்தையை கொன்ற மகன் கைது
ADDED : பிப் 01, 2024 02:06 AM

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே பரம்பூர் பகுதியை சேர்ந்தவர் மாதவன், 58. இவர், அப்பகுதியில் சிமென்ட், இரும்பு உள்ளிட்ட கட்டட பொருட்கள் விற்பனை செய்கிறார். இவரது மகன் சதீஸ், 23, நீண்ட காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு, வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், அவருக்கு நாள் தோறும் வழங்கப்படும், மனநிலை பாதிப்பை குணப்படுத்தும் மாத்திரைகளை, இரு தினங்களாக வழங்கவில்லை என கூறப்படுகிறது.
மறதியால் அவ்வாறு அவர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்,மனநிலை பாதிக்கப்பட்டு கோபமாக இருந்த மகன், அவரது தந்தையை அரிவாளால் வெட்டினார். இதில், பலத்த காயம் அடைந்த மாதவன், சம்பவ இடத்திலேயே இறந்தார். அன்னவாசல் போலீசார், சதீஸை கைது செய்தனர்.
முதியவர் கொலை முன்னாள் வீரருக்கு ஆயுள்
கிருஷ்ணகிரி அடுத்த பெல்லாரம்பள்ளியை சேர்ந்தவர் பாலமுருகன், 34. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவரது பங்காளியான முன்னாள் ராணுவ வீரர் சூர்யா, 42. அவரது அண்ணன்பச்சையப்பன், 46, ஆகியோருக்கும் இடையே, 2013 நவ., 3ல், நிலத்தகராறு ஏற்பட்டது.
அப்போது, அங்கு பாலமுருகனின் மாமனார் முனியப்பன், 60, என்பவரை சூர்யா மற்றும் பச்சையப்பன் இருவரும் அரிவாளால் வெட்டி கொன்றனர்.
கிருஷ்ணகிரி போலீசார், சம்பவம் தொடர்பாக 11 பேரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்த வழக்கை விசாரித்த நீதிபதி தாமோதரன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், முனியப்பனை கொன்ற ராணுவ வீரர் சூர்யா, பச்சையப்பன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, தலா, 2,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
அதுபோல, சூர்யா தரப்பினரை தாக்கிய பாலமுருகனுக்கு ஓராண்டு சிறை, அவரது தரப்பை சேர்ந்த ராஜா, 42, என்பவருக்கு மூன்றாண்டு சிறை மற்றும் ஐந்து பேருக்கு ஜாமின் வழங்கி நீதிபதிதீர்ப்பளித்தார்.