/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
பாட்டிலை முகத்தில் குத்திய மாணவர் கைது
/
பாட்டிலை முகத்தில் குத்திய மாணவர் கைது
ADDED : பிப் 17, 2024 02:19 AM
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு ஆண்கள் பள்ளியில் பயிலும் 15 வயது இரு மாணவர்கள் சைக்கிளில், பிப்.13ம் தேதி சென்றபோது, அவருடன் பயிலும் ஒரு மாணவர் பைக்கில் மோதுவது போல வந்ததால் மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் மாலை தகராறு செய்த இரு தரப்பினரும், அறந்தாங்கி ரயில்வே கேட் அருகில் சென்று பேசிக் கொள்ளலாம் எனக்கூறி, ஒரு கட்டத்தில் ஒரு மாணவரை மற்றொரு 15 வயது மாணவர் பாட்டிலை உடைத்து முகத்தில் குத்தியுள்ளார்.
இதில், காயம்பட்ட மாணவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அறந்தாங்கி போலீசார், பாட்டிலை உடைத்து முகத்தில் குத்திய மாணவரை கைது செய்து, தஞ்சாவூர் இளம் சிறார் காப்பகத்தில் அடைத்தனர்.