தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ குளத்தில் மூழ்கி மாணவர் பலி

 குளத்தில் மூழ்கி மாணவர் பலி

 குளத்தில் மூழ்கி மாணவர் பலி


ADDED : ஏப் 03, 2026 09:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 09:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுக்கோட்டை: மாத்துார் அருகே, 10ம் வகுப்பு மாணவர், குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் முருகவேல் மகன் பரத், 15. மாத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார்.

இந்நிலையில், பள்ளி சிறுவர்கள் சிலருடன், அப்பகுதியில் உள்ள குளத்தில் நேற்று குளிக்க சென்றார். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற பரத், தண்ணீரில் மூழ்கினார். சக சிறுவர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து, பரத்தின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, திருச்சி நவல்பட்டு தீயணைப்பு வீரர்கள், ரப்பர் படகுகள் உதவியுடன் பரத் உடலை மீட்டனர். மாத்துார் போலீசார், பரத் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us