/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
தரமற்ற ரேஷன் அரிசி அமைச்சர் 'டென்ஷன்'
/
தரமற்ற ரேஷன் அரிசி அமைச்சர் 'டென்ஷன்'
ADDED : ஜன 06, 2024 08:28 PM
ஆலங்குடி:புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், நகைக்கடன் தள்ளுபடிக்கு மேல்முறையீடு செய்த பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்றார். பின், அப்பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் திடீர் ஆய்வு செய்த போது, பழுப்பு நிறம், கருப்பு அதிகம் உள்ள தரமற்ற அரிசி பொதுமக்களுக்கு வழங்குவதை பார்த்து டென்ஷன் ஆனார். அதிகாரிகளிடம், 'இதுபோன்ற அரிசியை மக்களுக்கு வழங்கக் கூடாது. தரமற்ற அரிசி மூட்டைகளை உடனே திரும்பி அனுப்ப வேண்டும். மாவட்டம் முழுதும் தரமான அரிசி வழங்க வேண்டும்' என்றார்.
மேலும், 'தரமற்ற அரிசி வழங்கினால், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என கூட்டுறவு சார் - பதிவாளர் அன்னலெட்சுமியை கண்டித்தார்.