/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
சிறுவன் துாக்கிய போது நீரில் விழுந்த குழந்தை பலி
/
சிறுவன் துாக்கிய போது நீரில் விழுந்த குழந்தை பலி
ADDED : பிப் 04, 2024 02:44 AM
விராலிமலை,: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே கீழமேடை சேர்ந்தவர் கமலேஷ், 23. இவரது மனைவி சுபலட்சுமி, 21. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சுபலட்சுமிக்கு ஒரு மாதத்திற்கு முன் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது.
நேற்று முன்தினம் சுபலட்சுமி, வீட்டின் அருகே பாய் விரித்து குழந்தையை படுக்க வைத்து, துணி துவைத்துக் கொண்டிருந்தார். அருகில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது மகன், ஆசையாய் தன் தங்கையை துாக்கிய போது, அருகில் பக்கெட்டில் இருந்த தண்ணீரில் குழந்தை கை தவறி விழுந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சுபலட்சுமி, ஓடி சென்று குழந்தையை மீட்டு மண்டையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கிருந்து ஆம்புலன்சில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, குழந்தை இறந்தது. மண்டையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.