/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
விவசாய கடனில் இழுபறி அமைச்சர் கடும் அதிருப்தி
/
விவசாய கடனில் இழுபறி அமைச்சர் கடும் அதிருப்தி
ADDED : நவ 18, 2024 04:17 AM
புதுக்கோட்டை,: புதுக்கோட்டையில் கூட்டுறவு துறை சார்பில், 71வது கூட்டுறவு வார விழா கலெக்டர் அருணா தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்று, 721 பயனாளிகளுக்கு 5 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு கடன் திட்டங்களை வழங்கினர்.
அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், ''ஒரு சில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் கொடுப்பதில் இழுபறி நீடிக்கிறது. அதை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். குறிப்பாக, என் தொகுதியிலேயே முறையாக விவசாய கடன் வழங்குவதில்லை.
''இந்த வங்கிகள் வாயிலாக கல்வி கடனும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதையும் வழங்க கூட்டுறவு துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என்றார்.