/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
போலீசை கண்டித்து போராட்டம் நடத்த முயன்றவர்கள் கைது
/
போலீசை கண்டித்து போராட்டம் நடத்த முயன்றவர்கள் கைது
போலீசை கண்டித்து போராட்டம் நடத்த முயன்றவர்கள் கைது
போலீசை கண்டித்து போராட்டம் நடத்த முயன்றவர்கள் கைது
ADDED : ஜன 30, 2025 12:18 AM

புதுக்கோட்டை:வேங்கைவயல் வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசையும், தமிழக அரசை கண்டித்து, புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற, மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் மூன்று பேரும், பாதிக்கப்பட்ட சமூகத்தையே சேர்ந்தவங்களாக உள்ளனர்.
பாதிக்கப்பட்ட சமூகத் தையே குற்றவாளியாக சித்தரிக்கும், சி.பி.சி.ஐ.டி., காவல் துறை பிரிவை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்து, புதுக்கோட்டை மாவட்ட மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நேற்று புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்காக கூடினர்.
அப்போது, அவர்கள் சி.பி.சி.ஐ.டி.,யை கண்டித்தும், தமிழக அரசு கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து, போலீசார் அவர்களை கைது செய்து, 20க்கும் மேற்பட்டவர்களை அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையே, வேங்கைவயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.
மதுரை மாவட்டம் கொக்குளம் கண்ணன் தாக்கல் செய்த மனு:வேங்கைவயல் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது. உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டையில் பிப்., 1ல் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனுவை, நீதிபதி எம்.நிர்மல் குமார் விசாரித்தார்.அரசு தரப்பு கூறியதாவது:
சிலரிடம் அலைபேசிகளை கைப்பற்றி அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து, குற்றவாளிகள் யார் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்பதற்கு ஆதாரங்களுடன் மனுதாரர் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நடத்தலாம்.
இவ்வாறு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம். ஏற்கனவே போராட்டங்கள் நடந்துள்ளன. மேலும் போராட்டம் தேவையற்றது. தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது' எனக் கூறப்பட்டது.

