ADDED : செப் 11, 2026 04:03 AM

அ நிறம் | அளவு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில், சில நாட்களாக காலை, இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்தடை நிலவி வருகிறது.
இந்நிலையில், கீரமங்கலத்தில், நேற்று முன்தினம் இரவு, மின்சாரம் தடைபட்டு, நீண்ட நேரமாக வராத நிலையில், அரசு ஆரம்ப மருத்துவ நிலையத்தில், நோயாளிகளுக்கு, மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில், டாக்டர் சிகிச்சை அளித்தார். இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
