/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
ஆர்.டி.ஓ., சென்ற கார் மீது பைக் மோதியதில் இருவர் பலி
/
ஆர்.டி.ஓ., சென்ற கார் மீது பைக் மோதியதில் இருவர் பலி
ஆர்.டி.ஓ., சென்ற கார் மீது பைக் மோதியதில் இருவர் பலி
ஆர்.டி.ஓ., சென்ற கார் மீது பைக் மோதியதில் இருவர் பலி
ADDED : செப் 20, 2024 11:56 PM

புதுக்கோட்டை:புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக இருப்பவர் ஐஸ்வர்யா.
இவர், திருமயம் தாசில்தார் அலுவலகத்திற்கு அரசு வாகனம், 'பொலிரோ' காரில் நேற்று சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் காமராஜ் என்பவர் ஓட்டினார். இவருடன் ஆர்.டி.ஒ.,வின் உதவியாளரும் சென்றார்.
எதிர்திசையில், ராமநாதபுரம் பகுதியிலிருந்து சென்னை நோக்கி பீஹார் மாநிலம் பாங்கா பகுதியைச் சேர்ந்த முகமதுபயாஸ், 28, மற்றும் முகமதுபைசல், 20, ஆகியோர் பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, நகரப்பட்டி என்ற இடத்தில் பைக்கில் சென்றவர்களுக்கு முன்னால், அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை முந்தி செல்ல முயன்ற போது, எதிரே வந்த ஆர்.டி.ஒ., கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில், பைக்கில் சென்ற இருவரும், துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விபத்தில், வருவாய் கோட்டாட்சியருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. கார் டிரைவர் காமராஜருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு, புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். நமணசமுத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.