/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
கல் ஏற்றிய லாரி மோதி பைக்கில் சென்ற இருவர் பலி
/
கல் ஏற்றிய லாரி மோதி பைக்கில் சென்ற இருவர் பலி
ADDED : டிச 30, 2024 11:27 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே மலைக்குடிப்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த விவசாயி வீரப்பன், 50, என்பவர் பைக்கில் சென்றார். இவர், மதுரை -- தஞ்சாவூர் சாலையில் பைபாஸ் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, எதிரே மலைகுடிப்பட்டி கல் குவாரியில் இருந்து உடைக்கற்கள் ஏற்றிச் சென்ற லாரி எதிர்பாராத விதமாக வீரப்பன் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை மாறிச் சென்றது. அப்போது, எதிரே அந்த சாலையில் வந்த மற்றொரு பைக் மீதும் மோதியது.
இந்த கோர விபத்தில், அந்த பைக் பின்னால் அமர்ந்திருந்த தன்ராஜ், 40, என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். விபத்து தொடர்பான, 'சிசிடிவி' காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.