/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
வேங்கைவயல் வழக்கு நாளை ஒத்திவைப்பு
/
வேங்கைவயல் வழக்கு நாளை ஒத்திவைப்பு
ADDED : பிப் 02, 2025 02:32 AM
புதுக்கோட்டை:வேங்கைவயல் விவகாரம் தொடர்பான வழக்கு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை ரத்து செய்ய வேண்டும் என கோரி, புகாதாரர் சார்பில் கனகராஜ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இது போல சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டதில், இந்த வழக்கு, பட்டியல் இனத்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வராததால், வழக்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்ற மனு மீதான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று மீண்டும் இந்த மனு விசாரணைக்கு வந்தது. இருதரப்பினரும் வாதங்களை முன் வைத்தனர். அப்போது, மனு மீதான தீர்ப்பினை ஒத்தி வைத்து, நாளை வழங்கப்படும் என பொறுப்பு நீதிபதி வசந்தி தெரிவித்தார்.