sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

ஆள்மாறாட்டம் செய்து பண மோசடி புதுகை கலெக்டரிடம் பெண் புகார்

/

ஆள்மாறாட்டம் செய்து பண மோசடி புதுகை கலெக்டரிடம் பெண் புகார்

ஆள்மாறாட்டம் செய்து பண மோசடி புதுகை கலெக்டரிடம் பெண் புகார்

ஆள்மாறாட்டம் செய்து பண மோசடி புதுகை கலெக்டரிடம் பெண் புகார்


ADDED : ஜூன் 04, 2025 01:41 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:புதுக்கோட்டை, ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன், 53. இவர், ஈரோடு, பெருந்துறையிலுள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனம் வாயிலாக, கனடா சென்றிருந்த நிலையில், அங்கேயே உயிரிழந்தார்.

அவரது மனைவி ஜெயலட்சுமி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

என் கணவர் குணசேகரன், 2017 நவ., 20ம் தேதி கனடாவில் இறந்தார். அங்கேயே அவரது உடலை அடக்கம் செய்து, இறப்பு சான்றிதழையும் அனுப்பி வைத்தனர். சம்பளம் நிலுவை மட்டும், 5.98 லட்சம் ரூபாய் கிடைத்தது.

அதன் பின், இறப்புக்கான இழப்பீடு மற்றும் காப்பீடு தொகை, 7.50 லட்சம் ரூபாயை கொத்தமங்கலத்தை சேர்ந்த தங்கமணி, மாங்குடியை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர், பெருந்துறையிலுள்ள அந்த நிறுவனத்திற்கு சென்று, எனக்கு பதிலாக வேறு பெண்ணையும், குழந்தைகளையும் அழைத்துச் சென்று காட்டி, பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

பெண்ணின் புகார் பற்றி விசாரிக்க, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us