sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலவச மிக்சி, கிரைண்டர், பேன் வழங்க பெண்கள் விபரம் கணக்கெடுப்பு

/

இலவச மிக்சி, கிரைண்டர், பேன் வழங்க பெண்கள் விபரம் கணக்கெடுப்பு

இலவச மிக்சி, கிரைண்டர், பேன் வழங்க பெண்கள் விபரம் கணக்கெடுப்பு

இலவச மிக்சி, கிரைண்டர், பேன் வழங்க பெண்கள் விபரம் கணக்கெடுப்பு


ADDED : ஜூலை 15, 2011 09:54 PM

Google News

ADDED : ஜூலை 15, 2011 09:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: இலவச மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவற்றை வழங்குவதற்காக, பெண்கள் குறித்த விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.தமிழக முதல்வர் ஜெ., தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகளில், முக்கியமானதாக கருதப்படும் இலவச மிக்சி, கிரைண்டர், பேன் போன்றவை செப்.,15 முதல் வழங்கப்பட உள்ளன.

முதல் கட்டமாக ரேஷனில் அரிசி வாங்கும் கார்டுதாரர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பயனாளிகளாக, குடும்ப தலைவிகள் பற்றி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுகளில் பெரும்பாலும் குடும்ப தலைவர்களாக ஆண்களே உள்ளனர். இதுகுறித்த விவரங்கள் ஏற்கனவே 'எல்காட்டில்' பதியப்பட்டுள்ளன. இந்நிலையில், இலவசங்களை பெண்களிடம் நேரிடையாக வழங்குவதற்காக பயனாளிகள் பட்டியலில் பெண்கள் பெயர்களை சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. கார்டு வாரியாக ரேஷன் கடை பதிவேட்டில் உள்ள பெண்களின் பெயர்களை, அதிகாரிகள் கம்ப்யூட்டரில் நான்கு நாளுக்குள் பதிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us