/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தரமற்ற மாற்றுப்பாதை : பீதியில் வாகன ஓட்டிகள்
/
தரமற்ற மாற்றுப்பாதை : பீதியில் வாகன ஓட்டிகள்
ADDED : ஆக 13, 2011 04:35 AM
கமுதி : கமுதி-அருப்புக்கோட்டை ரோட்டில் பாலம் அகலப்படுத்தும் பணிக்காக அமைக்கப்பட்ட மாற்றுப்பாதை சரியில்லாததால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.
கமுதி அருகே மேலராமநதியில் அமைந்துள்ள பாலத்தை அகலப்படுத்த அரசு 15 லட்ச ரூபாய் ஒதுக்கியது.
பாலம் பணிக்காக அருகில் உள்ள கண்மாய் வழியாக மாற்றுப்பதை அமைக்கப்பட்டது. மேடு பள்ளமாக உள்ள இந்த பாதையில் செல்ல வாகனங்கள் சிரமப்படுகின்றன. சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக இந்த வழியாக வாகனங்கள் செல்ல மிகவும் சிரமப்பட்டன.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி சக்திவேல் கூறுகையில், ''தரமான மாற்றுப்பாதை அமைக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தப்படும். பாதையில் தண்ணீர் தேங்கி இருப்பதால் பாலம் பணி நடக்க தாமதமாகிறது,'' என்றார்.