/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு தனி பூத்
/
உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு தனி பூத்
ADDED : ஜூலை 15, 2011 09:53 PM
ராமநாதபுரம் : உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு தனி பூத் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.உள்ளாட்சி தலைவர்களின் பதவிக்காலம் அக்.,25 உடன் முடிவடைகிறது.
இதையொட்டி நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான, வாக்காளர் விபரங்கள் அந்தந்த யூனியன் அலுவலகம் மூலம், வார்டு வாரியாக சேகரிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஓட்டுச்சாவடிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஒரு நபர் உறுப்பினர் வார்டாக மாற்றப்படுவதால், ஏற்கனவே இருந்த ஓட்டுச்சாவடி எண்ணிக்கையில், 10 சதவீதம் வரை அதிகரிக்கப்பட உள்ளது. இதில் 1000 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள வார்டுகளில், ஆண், பெண்களுக்கு தனி ஓட்டுச்சாவடிகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

