/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அனுமதியின்றி நடத்திய சாயப்பட்டறைக்கு "சீல்'
/
அனுமதியின்றி நடத்திய சாயப்பட்டறைக்கு "சீல்'
ADDED : ஜூலை 11, 2011 10:45 PM
உச்சிப்புளி : உச்சிப்புளி அருகே அனுமதியின்றி நடத்திய சாயப்பட்டறைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்து நான்கு பேரை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தை சேர்ந்த ஆறுமுகம், மண்டபம் பிரப்பன்வலசையில் தனியார் இடத்தை வாடகைக்கு பிடித்தார். இங்கு அவரது தம்பி கண்ணன் மற்றும் சிலர் சேர்ந்து அனுமதியின்றி சாயப்பட்டறை நடத்தினர். தகவலறிந்த ராமநாதபுரம் தாசில்தார் சுந்தரமூர்த்தி துணை தாசில்தார் தமீம், சாயப்பட்டறையை சோதனையிட்டபோது அனுமதியின்றி நடத்தியது தெரியவந்தது. அங்கு பணியாற்றிய கன்னிராஜபுரத்தை சேர்ந்த தினகரன்(22), பொன்னுலிங்கம்(22), சத்தியமூர்த்தி(22), பெரம்பலூரை சேர்ந்த கண்ணன்(20)ஆகியோரை பிடித்து உச்சிப்புளி போலீசில் ஒப்படைத்தனர். ரூ. 25 லட்சம் மதிப்புடை இயந்திரங்களை பறிமுதல் செய்து சாயப்பட்டறைக்கு சீல் வைத்தனர். தலைமறைவான உரிமையாளர் ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.