sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இடம் இருந்தா இலவசம்: வனத்துறையில் 6 லட்சம் மரக்கன்றுகள் வளர்ப்பு: விவசாயிகள், நிறுவனங்கள், மக்களுக்கு அழைப்பு

/

இடம் இருந்தா இலவசம்: வனத்துறையில் 6 லட்சம் மரக்கன்றுகள் வளர்ப்பு: விவசாயிகள், நிறுவனங்கள், மக்களுக்கு அழைப்பு

இடம் இருந்தா இலவசம்: வனத்துறையில் 6 லட்சம் மரக்கன்றுகள் வளர்ப்பு: விவசாயிகள், நிறுவனங்கள், மக்களுக்கு அழைப்பு

இடம் இருந்தா இலவசம்: வனத்துறையில் 6 லட்சம் மரக்கன்றுகள் வளர்ப்பு: விவசாயிகள், நிறுவனங்கள், மக்களுக்கு அழைப்பு


ADDED : செப் 06, 2024 04:52 AM

Google News

ADDED : செப் 06, 2024 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை சார்பில் தமிழ்நாடு பசுமை திட்டத்தில் நர்சரி கார்டன் அமைத்து 6 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது. நிலம், வேலி, தண்ணீர் வசதி உள்ள விவசாயிகள், அரசு அலுவலகம், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

ராமநாதபுரம் வனத்துறை சார்பில் உயிர் பண்ணை, பசுமையாக்கல் திட்டத்தில் ஆண்டுதோறும் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது. இவை வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் நெடுஞ்சாலைகள், கண்மாய்கள், ஊருணி பகுதிகளில் நடப்படுகின்றன.

இந்நிலையில் 2023, 2024 ல் தமிழ்நாடு பசுமை திட்டத்தில் ராமநாதபுரம் வனத்துறை சார்பில் 5 நர்சரிகளில் 6 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது.

மரம் வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் ஆற்றங்கரை - 90259 52577, 741821 19215, சாயல்குடி- 84387 71496, கமுதக்குடி - 97864 56941, வன விரிவாக்க மையம் - 99769 69370 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ேஹமலதா கூறுகையில், கமுதக்குடி, ஆற்றங்கரை, சாயல்குடி ஆகிய இடங்களில் நர்சரி கார்டன் அமைக்கப்பட்டுள்ளது. செம்மரம், வேம்பு, புங்கன், புளி, தேக்கு, மா, பலா, ஈட்டி, கொய்யா, நாவல், சவுக்கு, இலுப்பை, மகாகனி, பூவரசு, நெல்லி, கொடுக்காபுளி உள்ளிட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது.

நிலம், தண்ணீர் வசதி, வேலி அமைத்து மரம் வளர்க்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்குகிறோம்.

விவசாயிகள், அரசு அலுவலகத்தினர் மரக்கன்றுகள் கேட்டு பதிவு செய்கின்றனர். மேலும் பள்ளி, கல்லுாரிகள், தனியார் நிறுவனங்களில் வளாகங்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us