/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மகளிர் திட்ட பண்ணை வளாகம் பராமரிப்பில்லாமல் அரசு நிதி வீணடிப்பு: புதர்மண்டிய நர்சரி; நுழைவு வாயில் ஆக்கிரமிப்பு

ADDED : பிப் 28, 2025 07:05 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் பயனடையும் வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட பண்ணை வளாகம் பராமரிக்கப்படாமல் செடி, கொடி வளர்ந்து புதர்மண்டியுள்ளதால் பல லட்சம் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. நுழைவு வாசலையும் ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மகளிர் திட்டத்தின் கீழ் பட்டணம்காத்தான் கலெக்டர் அலுவலகம் அருகே ராமேஸ்வரம் ரோட்டோரத்தில் தனியார் நிதி பங்களிப்புடன் பல லட்சம் நிதியில் மகளிர் குழுவினர் மூலம் பராமரிக்கும் வகையில் மரக்கன்றுகள் வளர்க்கும் நர்சரி, சோலார் பேனல் உள்ளிட்ட வசதிகளுடன் சுற்று வேலியுடன் பண்ணை அமைக்கப்பட்டது.
இதன் அருகில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு கடைகள் அமைத்து தந்துள்னர். இந்நிலையில் தொடர் பராமரிப்பில்லாமல் பண்ணை வளாகத்தில் புற்கள், முட்செடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. மரக்கன்றுகள் வளர்க்க அமைக்கப்பட்ட நர்சரி சேதமடைந்துள்ளது. இதனால் ரூ.பல லட்சம் வீணாகியுள்ளது. பண்ணையின் நுழைவு வாசலை ஆக்கிரமித்து கடை அமைத்துள்ளனர். இவற்றை ஏனோ கண்டும் காணாதது போல அதிகாரிகள் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டினர்.
எனவே மகளிர் குழுவினர் பயன்பெறும் வகையில் பண்ணை வளாகத்தை துாய்மை செய்து, நுழைவுப்பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றி மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.