
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபட்டினம், ; தமிழ்நாடு கராத்தே அசோசியேஷன் சார்பில் தமிழக அளவில் 40-வது சப்-ஜூனியர் கராத்தே போட்டி சமீபத்தில் சென்னையில் நடந்தது.
வண்ணாங்குண்டு ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி வேதிகா 13 வயதிற்குட்பட்ட குமித்தே பிரிவியில் இரண்டாமிடமாக வெள்ளிப் பதக்கம் பெற்று தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.
புதுச்சேரியில் நடக்கும் போட்டியில் பங்கேற்கவுள்ள கராத்தே மாணவி மற்றும் கராத்தே பயிற்சியாளர் தினைக்குளம் சசிகுமார் ஆகியோரை பள்ளி தாளாளர் பாண்டி, நிர்வாக அலுவலர் கதிரேசன், முதல்வர் உமாராணி ஆகியோர் பாராட்டினர். மாணவிக்கு ஊக்கத்தொகையும் சான்றிதழும் வழங்கப்பட்டது.