/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு இன்றி வாழ்வாதாரம் பாதிப்பு; 2025-26 கைத்தறி ஆண்டாக அறிவிக்கப்படுமா

ADDED : பிப் 24, 2025 04:20 AM
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு உள்ளிட்ட தீர்க்கப்படாத பல்வேறு பிரச்னைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 2025 - 26 கைத்தறி ஆண்டாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பரமக்குடி, எமனேஸ்வரம் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நெசவுப் பணிகளை நம்பி உள்ளனர். இதன்படி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியாரிடம் பணி செய்யும் நிலையில் கூலி பெறுகின்றனர்.
தொடர்ந்து நுால், பம்பர் பட்டு சேலைகள் விலை ஏற்றம் உள்ள சூழலில், கூலியில் உயர்வு இல்லாமல் இருக்கிறது. இதன்படி நிர்ணயிக்கப்பட்ட கூலியை அட்டவணைப்படி டிசைன் அடிப்படையில் முழுமையாக வழங்க வேண்டும்.
பட்டு நுால்களுக்கு 20 சதம் மானியம் அரசு வழங்க வேண்டும். மேலும் அனைத்து வகை நெசவாளர்களுக்கும் 30 சதவீதம் கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு 11 ரகத்தை முழுமையாக கைத்தறிக்கு அமல்படுத்துவதுடன், விசைத்தறியில் புகுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 2025--26ஐ கைத்தறி ஆண்டாக அறிவித்து அனைத்து கைத்தறி துணி ரகங்களையும் விற்பனை செய்து, மக்களிடம் சேர்க்க அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கூட்டுறவு மற்றும் தனியாரிடம் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ரகங்கள் விற்பனை செய்ய குழு அமைக்கப்பட வேண்டும். பசுமை குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர வேண்டும்.
மூன்று மாதங்கள் மழைக்கால பாதிப்பை ஈடு செய்ய நிவாரணம் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு (பி.எம்.எஸ்.,) பாரதிய மஸ்துார் சங்க கைத்தறி சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.