/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மானாவாரி பயிர் சாகுபடியில் மகசூல் அதிகரிக்க விவசாயிகளே மாத்தி யோசிங்க
/
மானாவாரி பயிர் சாகுபடியில் மகசூல் அதிகரிக்க விவசாயிகளே மாத்தி யோசிங்க
மானாவாரி பயிர் சாகுபடியில் மகசூல் அதிகரிக்க விவசாயிகளே மாத்தி யோசிங்க
மானாவாரி பயிர் சாகுபடியில் மகசூல் அதிகரிக்க விவசாயிகளே மாத்தி யோசிங்க
ADDED : ஜூலை 31, 2024 05:48 AM
ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி, சிறுதானியங்கள் 25 ஆயிரம் ஏக்கர், பயறு வகைகள் 10ஆயிரம் ஏக்கர், எண்ணெய்வித்து 6000 ஏக்கரில் சாகுபடி நடக்கிறது. ஆண்டுதோறும் அக்., நவ.,ல் வடகிழக்கு பருவமழையை மட்டும் நம்பி மானாவாரியாக நெல், பருத்தி, மிளகாய், சோளம் பயிரிடப்படுகிறது.
போதிய மழை இல்லாத போது வறட்சியில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க மானாவாரி பயிர் சாகுபடியில் விதை கடினப்படுத்தல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூல், லாபம் பெறலாம் என வேளாண்துறை விவசாயிகளை மாத்தி யோசிக்க வலியுறுத்தியுள்ளது. மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் சிவகாமி கூறியிருப்பதாவது:
விதை கடினப்படுத்துதல் என்பது விதையை சில மணி நேரம் நீரில் ஊற வைத்து பின்னர் விதைகளை அதன் இயல்பான ஈரப்பதத்திற்கு உலர வைக்க வேண்டும்.
நீருடன் சில மருந்துகளை கலந்து ஊற வைப்பதால் விதைகளின் வீரியம் அதிகரித்து வறட்சியை தாங்கி வளர்வதுடன் மிக குறைந்த செலவில் 10 முதல் 15 சதவீதம் மகசூல் அதிகரிக்கிறது.
நெல், கம்பு, பருத்தி, சூரியகாந்தி விதைகளை கடினப்படுத்த 20 கிராம் பொட்டாசியம், குளோரைடினை 1 லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும். இக்கரைசலில் 650 மி.லி., எடுத்து அதில் 1 கிலோ விதையை 10 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் சில மணி நேரம் நிழலில் உலர்த்தி இயல்பான ஈரப்பதம் வரும் வரை வெயிலில் உலர்த்தி பின்னர் விதைக்க வேண்டும். சூரிய காந்தி விதைக்கு 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதனால் அதிக வெப்பநிலை, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நேரத்தில் வாடாமல் இருக்கும்.
பூக்கள் வெளிவரும் கால அளவானது குறையும். நெல் விதைகளில் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தன்மை அதிகரிக்கும் என்பதால் மகசூல் அதிகரிக்கும். உவர் மண் மற்றும் வறட்சியான நிலங்களில் மண்ணின் தன்மையை நன்றாக தாங்கி வளரும் திறன் அதிகரிக்கும் என்றார்.
ராமநாதபுரம், ஜூலை 31-
மானாவாரி பயிர் சாகுபடியில் விதையைக் கடினப்படுத்துதல் முக்கியமான தொழில் நுட்பம் என்பதால் இதனைக் கடைப்பிடித்தால் விவசாயிகள் மிகக்குறைந்த செலவில் 10 முதல் 15 சதவீதம் கூடுதல் மகசூல் அதிக லாபம் பெறலாம் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

