ADDED : மே 16, 2024 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நயினார்கோவில் : பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவ விழா நடக்கிறது.
இங்கு தினமும் சவுந்தர்ய நாயகி, நாகநாத சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். இதன்படி பூத வாகனத்தில் பிரியா விடையுடன் நாகநாத சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதே போல் சிம்மம், யானை, குதிரை வாகனங்களில் வீதியுலா வரும் நிலையில், மே 21 காலை 8:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.