/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் 39 புகையிலை மூடை பறிமுதல்; ஒருவர் கைது இருவர் தப்பி ஓட்டம்

ADDED : ஜூலை 09, 2024 04:56 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அடங்கிய 39 மூடைகளை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர். கடத்தி வந்த இருவர் தப்பி ஓடினர்.
ராமநாதபுரம் அருகே பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் ராமநாதபுரம் பகுதியில் விற்பனைக்கு கைமாற்றப்படவுள்ளதாக தகவல் கிடைத்தது. சாலைத் தெரு பகுதியில் போலீசார் கண்காணிப்பில் இருந்தனர்.
அப்போது காரில் வந்த இருவர் காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கருப்பையா மகன் நாகராஜ் 58, என்பவரிடம் புகையிலை பொருட்களை கொடுக்க முற்பட்டனர். அப்போது போலீசார் சுற்றிவளைத்து காருடன் 39 மூடை புகையிலையை பறிமுதல் செய்து நாகராஜை கைது செய்தனர்.
போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடிய ஆர்.எஸ்.மடை சுந்தரம் மகன் திருமுருகன் 40, பழனி 38, ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.